ஈரோடு வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு..!!

ஈரோடு வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு..!!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நிறைவடைந்தது.  74 புள்ளி 69 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில்,  வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, சித்தூரில் உள்ள போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்ட வாக்கு இயந்திரங்கள், கட்சி முகவர்கள் முன்னிலையில், அடுக்கி வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.  பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டள்ள அறை வளாகம் முழுவதும், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  கட்டடத்தில் உள்ள முதல் தளம் மறறும் இரண்டாம் தளத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளன. 

இதனிடையே மாவட்ட தேர்தல் அதிகாரி சிவக்குமார், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்தனர்.  இந்த ஆய்வின்போது, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள்  உடனிருந்தனர்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com