டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கும் ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கும் ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. ஏற்கனவே அரசு அறிவித்த போனஸ் அறிவிப்பை ஏற்க மறுத்து, மற்ற அரசு ஊழியர்களை போலவே தங்களுக்கும் 20 சதவீதம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையும் படிக்க : புதிய பயனாளிகளாக 7 லட்சம் பேர் தேர்வு - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
இதுதொடர்பாக, கடந்த மூன்றாம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, 20 சதவீத போனஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 824 பேர் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது