ஆவடியில் ராணுவ பீரங்கி வாகனங்கள் மற்றும் அதன் எஞ்சின் உள்ளிட்ட முக்கிய உதிரி பாகங்களின் இரண்டு நாள் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலையின் ஏ.வி.என்.எல் இன்ஸ்டிடியூட் ஆப் லேர்னிங் தங்கள் தயாரிப்புகளுக்கான பொது கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கிகளின் இன்ஜின் T-72, இன்ஜின் T-90, கியர் பாக்ஸ், மெயின் ஆயில் டேங்க் போன்ற பீரங்கிகளின் இஞ்சின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உதிரி பாகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியை தொடர்ந்து, அதிநவீன போர் டேங்குகளை உள்ளூர் மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்கான லைவ் டேங்க் ரன்னிங் டெமோ இன்று நடத்தப்பட உள்ளது. போர் டேங்குகள் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதை மக்கள் உணரவும் அனுபவிக்கவும் இந்த செயல்விளக்கம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கண்காட்சியை கண்ட கல்லூரி மாணவர்கள் கூறுகையில், இந்த கண்காட்சி தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகவும், நமது தேசத்தின் ராணுவத்தில் பயன்படுத்தக்கூடிய பீரங்கி வாகனங்கள் மற்றும் அதன் எஞ்சின் தொழில்நுட்பம் முக்கிய உதிரி பாகங்கள் என அனைத்தும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதோடு அது குறித்து விளக்கங்கள் அளிக்கப்படுவது மிகவும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்று நடைபெற உள்ள பீரங்கி வாகனங்களின் லைவ் டெமோவை காண ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க || பட்டா பெயர் மாற்றம் செய்ய கையூட்டு... கிராம நிர்வாக அலுவலர் கைது!!