2 குழந்தைகள் ஊர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து அமைந்துள்ளது பூலாகுட்டை என்ற கிராமம். இங்கு மாதப்பன் சந்திரிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ரீநிகா (5) மற்றும் அனிருத் (3) என்ற 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், சென்னையில் சுவீட் கடை ஒன்றில் மாஸ்டராக பணிபுரிந்து மாதப்பன் அவ்வப்போது தனது ஊருக்கு சென்று வருவார். அதே போல் மனைவி சந்திரிகா விவசாயம் செய்து வருகிறார்.
எனவே இரண்டு குழந்தைகளும் தினமும் எங்கயாவது நின்று விளையாடிக் கொண்டிருப்பர். அந்த வகையில் சம்பவத்தன்றும் தாய் சந்திரிகா மாலை வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அந்த குழந்தைகள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் விளையாடி கொண்டிருருந்தனர். அப்போது அந்த 2 குழந்தைகளும் எதிர்பாராத விதமாக ஊர் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளனர்.
மேலும் படிக்க | நவம்பரில் சுற்றுப்பயணம் தொடங்கும் மூன்றெழுத்து நடிகர்!
இதனால் குழந்தைகள் தத்தளித்து வெளியே வர முயன்றனர். சுமார் ஒரு மணி நேரம் அந்த வழியே யாரும் செல்லாததால், குழந்தைகள் குறித்து யாரும் அறியவில்லை. அப்போது குழந்தைகளை காணோம் என்று தாய் சந்திரிகா தேடியுள்ளார். தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கையில் கிணற்றுக்கு அருகே ஒரு தடயம் இருந்துள்ளது.இதனால் சந்தேகமடைந்த தாய் சந்திரிகா அக்கம்பக்கத்தினர் உதவியோடு போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் கிணற்றுக்குள் குதித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட மணி நேரம் தேடுதலுக்கு பிறகு அந்த 2 குழந்தைகளும் சடலமாக மீட்டனர். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் தொடர்ந்து விளையாடி கொண்டிருப்பர். எனவே பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.