18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியா மலாவி உறவு...!!

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியா மலாவி உறவு...!!
Published on
Updated on
1 min read

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க வளர்ச்சி சமூக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் கலாச்சார உறவை வலுப்படுத்துவதற்கான கூட்டம் சென்னை  தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதிகள் நடைபெற்றது.  

இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் ஆசிஃப் இக்பால், இந்திய ஆப்பிரிக்க தொழிற்சங்க சபையின் ஆணையர் ஷாகுல் ஹமீத், இந்தியாவிற்கான மலாவி குடியசின் தூதர் லியோனார்ட் மென்கசி, லெசோதோ அரசின் தூதர் தபாங் லிபஸ் கொலுமோ, மியான்மாருக்கான தமிழ்நாடு தூதரக அதிகாரி ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்தியா மலாவி உறவு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என மலாவி தூதகர் மென்கசி குறிப்பிட்டார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1964-ம் ஆண்டு மலாவியின் சுதந்திர தின விழாவில் பங்கேற்றதையும் அவர் நினைவு கூர்ந்தார். மலாவியின் தலைவர்கள் இந்தியாவில் உயர்கல்வி பெற்றதாக குறிப்பிட்ட மென்கசி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் வேட்புமனுவை மலாவி குடியரசு ஆதரிப்பதாக தெரிவித்தார்.  இந்திய அரசாங்கம் மலாவிக்கு 163 மில்லியன் டாலர்கள் கடன் வழங்கியுள்ளதாகவும், இது மலாவியில் பெட்ரோலியம், சர்க்கரை பதப்படுத்துதல் போன்ற துறைகளில் உதவுகிறது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com