மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை அறிவிப்பு!

மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இத்திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் பணி நடைபெற்றது.

முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தாா்.

இதனைத்தொடர்ந்து, முதற்கட்ட முகாம் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4 தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 14 தேதி வரையிலும் நடைபெற்றது. தொடர்ந்து, விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய தவறியவர்களுக்காக  விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

3 கட்டங்களாக நடைபெற்ற விண்ணப்பப்பதிவு சிறப்பு முகாம்களில், மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தொிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com