பாஜக கோட்டையை கைப்பற்றுவாரா கெஜ்ரிவால்!!!

பாஜக கோட்டையை கைப்பற்றுவாரா கெஜ்ரிவால்!!!
Published on
Updated on
1 min read

குஜராத்தில் ஆளும் பாஜக தனது ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு மிகவும் பயப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  குஜராத்தின் மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீலை நீக்க பாஜக முடிவு செய்துள்ளது எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  

டெல்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த எஃப்ஐஆரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் பெயர் இடம்பெற்றுள்ளது.  

இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக,  கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத்திற்குச் சென்று பல்வேறு "உத்தரவாதங்களை" அளித்து வருகிறார்.

இலவச மின்சாரம்,  மாதம் ரூ.3000 ,வேலையில்லாத் திண்டாட்டம், 10 லட்சம் அரசு வேலைகள், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 போன்ற உத்தரவாதங்களுடன் அனைவருக்கும் இலவச மற்றும் தரமான மருத்துவம் வழங்கப்படும் என கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.  ஆம் ஆத்மி தலைவர் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை ஐந்து முறை குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ளார்.  கிர் சோம்நாத் மாவட்டம் மற்றும் ராஜ்கோட்டில் உள்ள வெராவல் ஆகிய இடங்களில் அவர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவரது அடுத்த பயணத்தின் போது, ​​அவர் ஜாம்நகரில் உள்ள வணிகர் சமூகத்துடனும், சோட்டா உதேபூர் மாவட்டத்தில் உள்ள போடேலியில் உள்ள பழங்குடியினருடனும் உரையாடியுள்ளார். 

பாஜகவின் குஜராத்  ஊடக ஒருங்கிணைப்பாளர் யக்னேஷ் டேவ், பாட்டீலைப் பற்றி சிந்திக்காமல், பகல் கனவு காண்பதை விட்டுவிட்டு, அவர் மீது கவனம் செலுத்துமாறு கெஜ்ரிவாலை கேட்டுக் கொண்டுள்ளார்.   ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தற்போது இரண்டு நாள் பயணமாக குஜராத்தில் இருக்கிறார்.  குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தனது பயணத்தின் இரண்டாவது நாளில், கெஜ்ரிவால் ட்வீட்டர் பக்கத்தில், "குஜராத் மாநிலத்தில் பாஜக ஆம் ஆத்மி கட்சிக்கு பயப்படுகிறது. ஆதாரங்களின்படி, சிஆர் பாட்டீலை அதன் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்க பாஜக முடிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜக இவ்வளவு பயப்படுகிறதா?" என பதிவிட்டுள்ளார்.  அதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தலைவர் டேவ் ஒரு அறிக்கையில், கெஜ்ரிவால் "பகல் கனவு காணும் பொழுதுபோக்கை" வளர்த்துக் கொண்டதாகத் தெரிகிறது. "சிஆர் பாட்டீலைப் பற்றி நினைப்பதற்குப் பதிலாக, நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்" என்று டேவ் கூறியுள்ளார்.

குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் ருத்விஜ் படேலும் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி ட்வீட் செய்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com