மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், குரூப்-சி மற்றும் டி பணியாளர்கள் நியமனம் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரித்தது. இந்த ஊழலில் பணப் பரிமாற்றம் தொடர்பானவற்றை அமலாக்க துறை கண்காணித்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் அமலாக்க துறையால் நேற்று இரண்டு அமைச்சர்கள் உள்பட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 20 கோடி ரூபாய் தொகையை அமலாக்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க: மம்தாவால் கைவிடப்பட்ட பார்த்தா...
பார்த்தா சாட்டர்ஜி கைது:
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் 11 மணிநேர விசாரணைக்கு பின் கைது செய்துள்ளனர். இந்த ஊழல் நடந்தபோது சாட்டர்ஜி மாநில கல்வி அமைச்சராக இருந்தார்.
ஏஜென்சி அதிகாரிகள் நேற்று காலை 8 மணிக்கு அமைச்சரின் வீட்டில் விசாரணையைத் தொடங்கினர்.
கொல்கத்தாவில் உள்ள சாட்டர்ஜியின் நெருங்கிய நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாயை அமலாக்க துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக, பார்த்தா எப்போதும் சட்டசபை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அருகிலேயே அமர்வார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரும் கொல்கத்தா மேயருமான ஃபிர்ஹாத் ஹக்கீம் அமருவார்.
இதையும் படிக்க: மேற்கு வங்காளத்திலும் ஆபரேஷன் லோட்டஸை கையிலெடுக்கும் பாஜக!!!
வங்காள சட்டப் பேரவையில் பார்த்தா சாட்டர்ஜி அமர்ந்திருந்த நாற்காலியில் இப்போது ஃபிர்ஹாத் ஹக்கீம் அமர்வார். ஆசிரியர் முறைகேடு வழக்கில் வங்காள முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி சிறையில் உள்ளார். மேலும், இந்த மோசடி தொடர்பான விசாரணை முடியும் வரை அவர் திரிணாமுல் காங்கிரஸின் அனைத்து பதவிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன், சட்டசபையின் அனைத்து குழுக்களும் நீக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: ”என் மீது மை வீசினால் சகதியை வீசுவேன்”-மம்தா