காங்கிரஸ் தொண்டர்களால் மிரட்டப்பட்டரா கடை உரிமையாளர்!!எதற்காக?

காங்கிரஸ் தொண்டர்களால் மிரட்டப்பட்டரா கடை உரிமையாளர்!!எதற்காக?
Published on
Updated on
1 min read

இந்திய ஒற்றுமை பயணம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 7-ம் தேதி காந்தி மண்டபம் முன்பு தொடங்கினார். அதில் தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்தப் பயணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் 3570 கி.மீ.  தொலைவில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரையாக செல்லவுள்ளனர்.  ராகுல் உட்பட 119 தலைவர்களின் பெயர்களை “பாரத் யாத்ரிகள்” என்று கட்சி அறிவித்துள்ளது.

கேரளாவில்..:

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் செப்டம்பர் 11 ஆம் தேதிகேரளாவுக்குள் நுழைந்தது. கேரளாவில் நுழைந்த ராகுல் காந்தி 19 நாட்கள் 450 கிமீ பயணம் செய்து மலப்புரத்தில் உள்ள நிலம்பூருக்கு செல்ல இருக்கிறார். இந்த யாத்திரை செப்டம்பர் 14 அன்று கொல்லம் மாவட்டத்தை அடைந்தது. 

தொண்டர்களின் மிரட்டல்:

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு  நிதி தராததால் கடைக்காரர் மிரட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின் கொல்லத்தில் பயணத்திற்கு ரூ.2000 கொடுக்காததற்காக காய்கறி வியாபாரியிடம் காங்கிரஸ் தொண்டர்கள் தவறாக நடந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காய்கறி கடை நடத்தி வரும் எஸ் ஃபவாஸ் என்பவர் காங்கிரஸ் தொண்டர்கள்  அவரது கடைக்கு வந்ததாக கூறியுள்ளார். அவரிடம் நடைபயணத்திற்கு நன்கொடை கேட்டதாகவும் அதற்கு அவர்  ரூ.500 கொடுத்ததாகவும் ஆனால் 2000 ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார். அவர் தர் மறுத்ததால் கடையை சேதப்படுத்தி காய்கறிகளை வீசினர் எனவும் கூறியுள்ளார்.

நீக்கப்பட்ட தொண்டர்கள்:

நிதியைக் கொடுத்ததற்காக கடைக்காரரை மிரட்டியதாகக் கூறப்படும் செயலைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. 'இந்திய ஒற்றுமை பயணத்திற்கு'  2000 ரூபாய் கொடுக்காததற்காக காய்கறி கடை வியாபாரியிடம் தவறாக நடந்து கொண்ட மூன்று கட்சி தொண்டர்களை கேரளா  மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் இடைநீக்கம் செய்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com