4வது வந்தே பாரத் ரயில்...துவங்கி வைத்த பிரதமர் மோடி...!

4வது வந்தே பாரத் ரயில்...துவங்கி வைத்த பிரதமர் மோடி...!
Published on
Updated on
1 min read

இமாச்சல பிரதேசத்தின் உனா- டெல்லி இடையே நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்தார். 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்:

மத்திய அரசின் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ், உருவாக்கப்பட்ட ‘டிரெயின் 18’ என்றழைக்கப்படும் நடுத்தர விரைவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2019ம் ஆண்டு  டெல்லி- வாராணாசி இடையே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயிலை நாடு முழுவதும் இயக்க திட்டமிட்டு, பின்னர் 2வது ரயில் வண்டி டெல்லி-  ஜம்மு-காஷ்மீரின்  கத்ரா இடையே இயக்கப்பட்டது.

4வது எக்ஸ்பிரஸ் ரயில்:

அண்மையில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி குஜராத்தில் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்த பிரதமர் மோடி 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மும்பை- குஜராத் இடையே குஜராத்தில் இருந்து அறிமுகம் செய்து வைத்து அதில் பயணித்தார். அந்த வரிசையில் தற்போது 4வது ரயிலை இமாச்சல பிரதேசத்தின் உனா ரயில் நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி கொடி அசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். 

இந்த ரயில் 52 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களும் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக இந்த ரயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com