டெல்லி துணைநிலை ஆளுநர் முதலமைச்சருடன் அவசர சந்திப்பு...காரணம் என்ன?!!

டெல்லி துணைநிலை ஆளுநர் முதலமைச்சருடன் அவசர சந்திப்பு...காரணம் என்ன?!!
Published on
Updated on
1 min read

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தலைமையில் ஜி-20 மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  

டெல்லி சந்திப்பு:

ஜி-20 உச்சிமாநாட்டிற்கு முன் நடைபெறவுள்ள கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய துணைநிலை ஆளுநர் தலைமையில் இன்று கூட்டம் நடைபெறவுள்ளது.  இந்த கூட்டத்தில் துணைநிலை ஆளுநருடன், டெல்லி முதலமைச்சருடன் அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.  

அமைச்சர்களுடன்..:

ஜி-20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.  டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.  டிசம்பர் 1 ஆம் தேதி ஜி-20 தலைவர் பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.  உலகம் எதிர்கொள்ளும் அவசர உலகளாவிய சவால்களுக்கு ஒன்றாக பதிலளிப்பது என்ற இந்தியாவின் குறிக்கோளை இது  பிரதிபலிக்கிறது.

தூய்மையாகுமா?:

மாநாட்டை முன்னிட்டு, நகரை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் வகையில், டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகம் மூலம், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்தத் திட்டங்களின் கீழ் பல சாலைகள் துய்மையாக்கப்படவுள்ளதுடன் நீர் ஆதாரங்களும் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த வாரம் அனைத்து ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்திய சந்திப்பின் பின்னணியில் இந்த சந்திப்பு தற்போது நடைபெறவுள்ளது.  முக்கியத்துவம் வாய்ந்த இந்த சர்வதேச நிகழ்வை வெற்றியடையச் செய்ய தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அந்தக் கூட்டத்தில் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

மோடி தலைமையில்:

முன்னதாக டிசம்பர் 9 ஆம் தேதி, இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவி தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி மாநில ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுடன் சந்திப்பை நடத்தியிருந்தார்.  இந்தியாவின் ஜி-20 தலைமை பதவி முழு நாட்டிற்கும் சொந்தமானது என்றும், நாட்டின் பலத்தை காட்ட இது ஒரு தனித்துவமான வாய்ப்பு என்றும் பிரதமர் கூறியிருந்தார்.  குழுப்பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்பையும் கோரினார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com