உ.பி.,யின் வழியில் குஜராத்...காப்பி அடிக்கப்படுகிறதா தேர்தல் வாக்குறுதிகள்!!!

உ.பி.,யின் வழியில் குஜராத்...காப்பி அடிக்கப்படுகிறதா தேர்தல் வாக்குறுதிகள்!!!
Published on
Updated on
1 min read

குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று சூரத் சாலையில் பிரச்சாரம் நடத்தியுள்ளார். 

உ.பி.யின் வழியில் தேர்தல் வாக்குறுதிகள்:

  • ஹோலி-தீபாவளி அன்று இரண்டு இலவச கேஸ் சிலிண்டர்களை அறிவித்தது உ.பி. அரசு.  அதைப் போலவே பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஓராண்டில் இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என குஜராத் தேர்தலிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

  • 25,000 கோடி மதிப்பிலான முதலமைச்சரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டம் உ.பி.யில் வாக்குறுதியளிக்கப்பட்டது.  குஜராத்திலும் தற்போதுள்ள நீர்ப்பாசன வலையமைப்பை விரிவாக்கம் செய்ய ரூ.25,000 கோடி செலவழிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  • உ.பி.யில் உள்ள பெண் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டியைப் போல, குஜராத்தில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறந்த கல்லூரி மாணவர்களுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர் வழங்குவதாக  உறுதியளித்துள்ளது பாஜக.

  • ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வாக்குறுதியை அளித்தது உ.பி.  அதன் தொடர்ச்சியாக குஜராத்தில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி என வாக்குறுதி அளித்துள்ளது பாஜக.

  • உ.பி.,யை போலவே, குஜராத்திலும் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயண வசதி வழங்குவது குறித்து பரிந்துர செய்யப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com