மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 173 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு 7 ஆயிரத்து 268 கோடி ரூபாய் மாநில நிதி பகிர்வு மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு 31 ஆயிரத்து 962 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.அதற்கு அடுத்தபடியாக 17 ஆயிரத்து 921 கோடி ரூபாய் பீகார் மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்ச நிதியாக கோவா மாநிலத்திற்கு 688 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. மற்ற தென் மாநிலங்களான ஆந்திராவிற்கு 7 ஆயிரத்து 211 கோடி ரூபாயும், தெலங்கானாவுக்கு 3 ஆயிரத்து 745 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவுக்கு 3 ஆயிரத்து 430 கோடி ரூபாயும், கர்நாடகாவிற்கு 6 ஆயிரத்து 498 கோடி ரூபாய் நிதியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.