பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 7ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. மூத்த அமைச்சர்கள் 12 பேர் ராஜினாமா செய்த நிலையில், 43 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்ள மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பின், மத்திய அமைச்சரவை முதன்முறையாக இன்று கூடுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த சில மாதங்களாக காணொலி மூலம் நடைபெற்று வந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம், இந்தமுறை நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து அமைச்சர்களும் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத் தொடரில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.