வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக ஒருபுறம், காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கட்சிகள் மறுபுறம் என இன்றைய சட்டப்பேரவைத் தேர்தலில் இருமுனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி 60 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கட்சி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதியிலும் களமிறங்கியுள்ளன.
தொடர்ந்து தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், 1100 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறிந்து, அந்த வாக்குச்சாவடிகளில் 25 ஆயிரம் துணை ராணுவப்படையினர் உட்பட 31 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பரப்பரப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் மதியம் 1 மணி வரை மொத்தம் 51.35 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-நப்பசலையார்