முன்னாள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த இந்நாள் பிரதமர்!!!!

முன்னாள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த இந்நாள் பிரதமர்!!!!
Published on
Updated on
1 min read
"முரண்பாடுகள் நிறைந்ததே வாழ்க்கை” என்பதை நன்குணர்ந்துதொடர்ந்து இரண்டு முறை  பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அளித்த பங்களிப்பு ஏராளம்.  அவர் 1990 களில் இந்திய நிதித் துறை அமைச்சராக பெரும் சீர்திருத்தங்களைத் தொடங்கிய பெருமைக்குரிய பொருளாதார நிபுணர் ஆவார்.

மன்மோகன் சிங்:

இத்தகு பெருமைக்குரிய டாக்டர் மன்மோகன் சிங் செப்டம்பர் 26, 1932இல்  பிரிவினைக்கு முன் பஞ்சாபில் உள்ள காஹ் கிராமத்தில் பிறந்தார். அவர் பஞ்சாப் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகியவற்றில் உயர்கல்வியினை முடித்துள்ளார். இன்று அவர் 90 வயதை எட்டியுள்ளார். 

நரேந்திர மோடி:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.” என வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ”இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங் ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
மேலும் “அவரது பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பங்களிப்பு ஆகியவை ஈடு இணையற்றவை. எனக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் அவர் ஒரு உத்வேகம். அவர்களின் நலனுக்காக பிரார்த்திக்கிறேன்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com