ஒரு நொடியில் இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டி... குஜராத்தில் பரபரப்பு சம்பவம்...

குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் 40 ஆண்டுகள் பழமையான தண்ணீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
ஒரு நொடியில் இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டி... குஜராத்தில் பரபரப்பு சம்பவம்...
Published on
Updated on
1 min read
ஜூனாகத் மாவட்டத்தின் கிர்சாரா கிராமத்தில் தண்ணீர் டேங்க் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. 40 ஆண்டுகள் பழமையான இந்த தண்ணீர் டேங்க் சேதமடைந்து காணப்பட்டதாகவும், இதனை சீரமைக்க கோரி பலமுறை துறைசார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 
இந்நிலையில், அந்த உயர்நிலை நீர் தேக்க தொட்டி திடீரென இடிந்து விழுந்து சுக்குநூறானது. அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com