கோரமண்டல் விரைவு ரயில் தான் விபத்திற்கு காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்ததில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 போ் உயிாிழந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனா்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இரயில்வே துறை மூத்த அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா, கோரமண்டல் ரயில் அதிவேகத்தில் சென்றது தவறு என்றும், அதனால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், சிக்னல் குறைபாடு தொடர்பாகவும் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனவும், சரக்கு ரயில் தடம்புரளவில்லை, அதிவேகத்தில் சென்ற சென்னை கோரமண்டல் ரயில்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதன் பெட்டிகள் தடம் புரண்டதில்தான் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது என சுட்டிக்காட்டியுள்ள அவர், 139 என்ற ஹெல்ப்லைன் எண்ணை, பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் பாதிக்கப்பட்டோரை குடும்பத்தினர் சந்திக்கும் வகையில் அவர்தம் பயண செலவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்கஇந்திய இரயில்வேயும், விபத்துகளும்!: