தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களை புரட்டிப் போட்ட கனமழை !

வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்; லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு !!
தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களை புரட்டிப் போட்ட கனமழை !
Administrator
Published on
Updated on
3 min read

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 99 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 54 ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாகவும் தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தட்லா பூசபள்ளி, மெகபூபாபாத் ரெயில் நிலைகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்றும் பணி முழுவீச்சி நடைபெற்று வருவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விடாது பெய்து வரும் மழைக்கு தெலுங்கானாவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பலத்து காற்றுடன் பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்துள்ளன. மின்கம்பங்கள் சரிந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

Administrator

சாலைகள், ரெயில்வே பாலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் மழைவெள்ளம் வீடுகளை மூழ்கடித்துள்ளன. இதனால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆந்திராவை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி அம்மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கானா முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திராவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இம்மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தெலங்கானாவில் பெய்து வரும் மழையாலும், வெள்ளத்தாலும் தெலுங்கானா மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருவதாகவும் அம்மாநில துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா தெரிவித்துள்ளார்.

Administrator

கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள பாலேறு நீர்த்தேக்கம் மற்றும் முன்னேறு ஆறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் இருந்து வெளியேறி வரும் வெள்ளம் அருகில் உள்ள ஊரில் புகுந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்குக் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் குமரம் பீம்மில் 19 செ.மீ., மேடக் 17 செ.மீ., அடிலாபாத் 17 செ.மீ., காமரெட்டி 17 செ.மீ., சித்திப்பேட்டை 15 செ.மீ., ராஜண்ணா சிர்சில்லா 15 செ.மீ., நிர்மல் 14 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Administrator

ஆந்திராவிலும் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு பைபர் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு தேவையான உதவிகளை வழங்குவதற்காக தற்போது வரை 166 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதகாவும், தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Administrator

ஆந்திராவில் விடாது கொட்டித் தீர்த்து வரும் கனமழையில் என்டிஆர், குண்டூர், கிருஷ்ணா, ஏலூர், பல்நாடு, பாபட்லா மற்றும் பிரகாசம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. உடனடியாக மீட்க முடியாத இடத்தில் சிக்கி உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மழையால் பதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா, ஆந்திரா மாநில முதலமைச்சர்களை தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி மழை, வெள்ள பாதிப்பு மற்றும் சேத விவரங்களை குறித்து கேட்டறிந்தார். மேலும் இரு மாநிலத்திற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என்று ம் பிரமர் உறுதி அளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com