மத்திய கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் இன்று நண்பகல் கரையை கடக்கிறது.
கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் உள்ள மிக அதி தீவிர மோக்கா புயல் வடக்கு-வடகிழக்கு நோக்கி கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 17 கிமீ வேகத்தில், வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்க கடலில் போர்ட் பிளேயருக்கு வட-வடமேற்கே சுமார் 790 கி.மீ, காக்ஸ் பஜாரின் (வங்காளதேசம்) தென்-தென்மேற்கே 300 கி.மீ தொலைவிலும், சிட்வே (மியான்மர்) தென்மேற்கே 210 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது காக்ஸ் பஜாருக்கு இடையில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே இன்று நண்பகல் நேரத்தில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு, 180-190 கிமீ வேகத்தில் இடையே 210 கிமீ வேகத்தில் கூட காற்று வீசக்கூடும்.
இதையும் படிக்க: கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்...!!!