சோனியா காந்தி பிறந்தநாள்...மக்கள் அளித்த சிறந்த பரிசு?!!

சோனியா காந்தி பிறந்தநாள்...மக்கள் அளித்த சிறந்த பரிசு?!!
Published on
Updated on
1 min read

காந்தி குடும்பம் ரந்தம்பூர் புலிகள் சரணாலயத்திற்கு அருகிலுள்ள ருகா ரிசார்ட்டில் உள்ளது.  இந்த ரிசார்ட் காந்தி குடும்பத்தின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமானது.  டிசம்பர் 10-ம் தேதி சோனியா காந்தியுடன் பிரியங்கா காந்தியும் இந்திய ஒற்றுமை பயணத்தில் சேரலாம் என்று கூறப்படுகிறது.

ராஜஸ்தான் பயணம்:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது 76வது பிறந்தநாளை ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்பூரில் கொண்டாடுகிறார்.  நான்கு நாள் சுற்றுப்பயணமாக ராஜஸ்தானுக்கு வந்துள்ள சோனியா காந்தி இந்திய ஒற்றுமை பயணத்திலும் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.

ராஜஸ்தான் திட்டம்:

கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்குவார் என்றும், அவர் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் சில எம்.பி.க்களுக்கு செய்தி அனுப்பப்பட்டிருந்தது.  ஆனால், கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்டு ராஜஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார் சோனியா காந்தி. பிரியங்கா காந்தியும் ராஜஸ்தான் சென்றடைந்துள்ளார்.  ராகுல் காந்தியும் ரந்தம்பூர் சென்றுள்ளார்.

எதிர்பாராத சிறப்பு:

காந்தி குடும்பம் ரந்தம்பூர் புலிகள் சரணாலயத்திற்கு அருகிலுள்ள சுஜன் ஷேர் பாக் என்ற சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.  காந்தி குடும்பத்தின் நண்பர்களான அஞ்சலி மற்றும் ஜெய்சல் சிங் அதனுடைய உரிமையாளர்கள்.  இதில் சிறப்பு என்னவென்றால், அஞ்சலி மற்றும் ஜெய்சல் சிங்குடன் இணைந்து பிரியங்கா காந்தி ‘ரந்தம்பூர்: தி டைகர்ஸ் ரியல்ம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

சிறந்த பரிசு:

இமாச்சல பிரதேசம்-குஜராத் சட்டசபை தேர்தல் மற்றும் சர்தார்ஷாஹர் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் முழுவதும் ஒன்றாக இணைந்துள்ளது.  இவ்வாறான சூழ்நிலையில் தேர்தல் முடிவு குறித்து விவாதிக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் வெற்றி சோனியா காந்திக்கு சிறந்த பரிசாக இருக்கும்.

மோடி வாழ்த்து:

சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ட்வீட்டரில் , ”திருமதி சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது பிறந்தநாளில் அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com