மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நிமோனியா தொற்று காரணமாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதன் தொடர்ச்சியாக மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து அவரில் உடல்நிலை சீராக்கததால் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.
யெச்சூரியின் உடன் நிலையில் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது. அதில் சீதாராம் யெச்சூரி, கடுமையான சுவாசக்குழாய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் . தற்போது அவருக்கு சுவாச குழாய் பொறுத்தப்பட்டு இருப்பதாகவும் , ஆபத்தான நிலையில் உள்ள அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.