பீம் ஆர்மி தலைவர் மீது துப்பாக்கி சூடு; முதலமைச்சர் கண்டனம்!

பீம் ஆர்மி தலைவர் மீது துப்பாக்கி சூடு; முதலமைச்சர் கண்டனம்!
Published on
Updated on
1 min read

உத்தரப்பிரதேசத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அம்பேத்கர், தலித் உரிமைகள் அமைப்பின் தலைவராக சந்திரசேகர் ஆசாத் செயல்பட்டு வருகிறார். இவா், சஹரன்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மற்றொரு காரில் வந்த நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சந்திரசேகர் ஆசாத் மீது குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த சந்திரசேகர் ஆசாத் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். 

இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தொிவித்துள்ளாா். இதுகுறித்து அவரது ட்விட்டா் பதிவில், துப்பாக்கிசூடு சம்பவம் கண்டிக்க தக்கது எனவும், இந்த சம்பவத்தின் மூலம் உத்தரபிரதேசத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அம்பலப்படுத்துவதாகவும் தொிவித்துள்ளாா்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com