நாகலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளதால் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் திரிபுராவில் கடந்த 16-ந் தேதியும், மேகாலயா, நாகாலாந்துக்கு 27ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் 2ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகணிப்பு:
இந்த நிலையில், மூன்று மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மறுவாக்குப்பதிவு:
தேர்தல் பொது பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் படி, நாகாலாந்து சட்டசபை தொகுதிகளில் உள்ள நான்கு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று மறுவாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: இத்தாலி பிரதமர் தலைமையில் புவிசார் மாநாடு...!!!