மணிப்பூர் வன்முறை; பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பதிவு தொடக்கம்!

மணிப்பூர் வன்முறை; பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பதிவு தொடக்கம்!
Published on
Updated on
1 min read

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2 பழங்குடியின பெண்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை காவல் துறை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி, சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்தினா் இடையே நிலவி வரும் மோதல் காரணமாக, அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள காங்போக்பி மாவட்டத்தைச் சோ்ந்த 2 பழங்குடியினப் பெண்களை ஒரு கும்பல் நிா்வாணப்படுத்தி இழிவுபடுத்திய காணொலி சமூக ஊடகத்தில் வெளியாகி, நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன் அந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடா்பாக இதுவரை 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 7 பேரைக் காவல் துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில், இழிவுபடுத்தப்பட்ட 2 பெண்களிடம் காவல் துறை பெண் அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. அதேசமயம் அந்தப் பெண்களின் குடும்பத்தினரையும் அந்தக் குழு சந்தித்து, அவா்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com