4 மாதங்களுக்குப்பின் வயநாடு எம்.பியாக மக்களவையில் ராகுல்காந்தி பங்கேற்ற நிலையில், அமளியால் நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்ததை அடுத்து, ராகுல்காந்தியின் எம்.பி பதவி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனை வரவேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் இந்தியா கூட்டணிக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். டெல்லியின் காங்கிரஸ் அலுவலகத்தில் பாரம்பரிய நடனமாடி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து மக்களவை கூடியபோது மணிப்பூர் விவகாரம் தொடர்பான வாக்குவாதத்தால் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், ராஜஸ்தானில் பெண்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறி பாஜக எம்.பிக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு ராகுல்காந்தி காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதையடுத்து இந்தியா கூட்டணிக்கட்சி எம்.பிக்களின் வரவேற்பை அடுத்து 4 மாதங்களுக்குப்பின் ராகுல்காந்தி பங்கேற்றுள்ளார். 12 மணிக்கு கூடிய மக்களவையில் மணிப்பூர் தொடர்பாக பதாகைகளுடன் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி நியமன அதிகாரிகள் சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க || "ஊழலை வளர்க்கவே காங்கிரஸ் பணியாற்றுகிறது" பிரதமர் மோடி விமர்சனம்!!