பாரத் ஜோடோ யாத்ராவின் 4 வது நாள் பயணம்...தமிழகத்தில் இன்றுடன் முடிகிறதா?

பாரத் ஜோடோ யாத்ராவின் 4 வது நாள் பயணம்...தமிழகத்தில் இன்றுடன் முடிகிறதா?
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையின் 4-வது நாள் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். 

பாரத் ஜோடா யாத்ரா:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 7-ம் தேதி காந்தி மண்டபம் முன்பு தொடங்கினார். அதில் தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மலர் பாதை வரவேற்பு:

இதனையடுத்து, நேற்று 3-வது நாள் பாதயாத்திரையை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் தொடங்கி தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டார். அந்த பயணித்தின் போது வில்லுக்குறியில் மலர் பாதை அமைத்து ராகுலுக்கு வரவேற்பு அளிக்கபட்டது.

நாளை கேரளா:

இந்நிலையில், இன்று கன்னியாகுமரி முளகுமூடு பகுதியில் இருந்து 4-வது நாள் நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இத்துடன் தமிழகத்தில் பாதயாத்திரையை முடித்துகொள்ளும் ராகுல் காந்தி நாளை கேரளாவில் பாதயாத்திரையை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com