தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த கர்னல் மன்பிரீத் சிங்கின் உடலுக்கு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மற்றும் ராணுவ அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 13 -ஆம் தேதி கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷீஷ், போலீஸ் டி.எஸ்.பி. ஹுமாயுன் பட் ஆகியோர் வீரமரணமடைந்தனர்.
இதையடுத்து இறந்தவர்களின் உடல்களுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டு பின்னர் அவர்களது சொந்த கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், கர்னல் மன்பிரீத் சிங்கின் உடல் பஞ்சாப் மாநிலம் மொஹாலி அருகே உள்ள முல்லன்பூர் கரிப்தாஸ் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முன்னாள் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து ராணுவ வீரர்கள் மற்றும் கிராம மக்னள் கர்னல் மன்பிரீத் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.