புதுச்சேரி பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஜி.என்.எஸ். ராஜசேகரனின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

புதுச்சேரி பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஜி.என்.எஸ். ராஜசேகரனின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது
Published on
Updated on
1 min read

புதுச்சேரி பாஜக மாநில துணைத்தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனின் பிறந்தநாள் விழா காரைக்காலில் உள்ள திருநள்ளாறில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பிறந்த நாள் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

இவ்விழாவில், பாஜகவின் புதுச்சேரி மாநில, மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஜி.என்.எஸ் ராஜசேகரனுக்கு சாக்லேட் மாலை, சால்வை, மலர் கிரீடம் சூட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதேபோல், விழாவிற்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் அவரை வாழ்த்தி உரையாற்றினர். இதனையடுத்து, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு பூஜிக்கப்பட்ட பொருட்கள் வழங்கி, பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், காவல் துறை, வழக்கறிஞர்கள் சங்கம், காரைக்காலின் மூத்த பத்திரிகையாளர்கள், வியாபாரிகள் சங்கம் மற்றும் மக்கள் பொது நல இயக்கங்களை சேர்ந்தவர்களும் ஜி.என்.எஸ் ராஜசேகரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தக்களூர் செல்லபாண்டி தலைமையில், ஏராளமான இளைஞர்கள் ஜி.என்.எஸ். ராஜசேகரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com