நூறாண்டு பிரச்னைகளை நூறு நாட்களில் சரி செய்துவிட முடியுமா? - மோடி பேச்சு!

நூறாண்டு பிரச்னைகளை நூறு நாட்களில் சரி செய்துவிட முடியுமா? - மோடி பேச்சு!
Published on
Updated on
1 min read

நூறு ஆண்டுகளாக நிலவும் வேலைவாய்ப்பின்மை, சுயதொழில் பிரச்னைகளை நூறு நாட்களில் சரிசெய்துவிட முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ரோஸ்கர் திருவிழா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்: 

ரோஸ்கர் திருவிழா என்ற வேலைவாய்ப்பு  திட்டத்தின் மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு துறைகளில் வேலை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தை இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முதற்கட்டமாக அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 75 ஆயிரம் இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.

அதன்பேரில் ஜெய்ப்பூர், போபால், சண்டிகர், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில்  சுமார் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு 50 துறை அமைச்சர்கள் பணிநியமன ஆணைகளை வழங்கியுள்ளனர். யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட வாரியங்கள் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, மத்திய ஆயுதப்படை, ரயில்வே துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட 38 துறைகளில் காவலர், உதவி ஆய்வாளர், ஸ்டெனோ, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிரதமர் உரை:

வேலைவாய்ப்பு திருவிழாவை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி,  வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்புக்கான மத்திய அரசின் 8 ஆண்டு கால முயற்சியில் இது முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உற்பத்தி, சுற்றுலாத்துறைகளில் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், அத்துறைகளை பெருக்கவும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் மோடி தெரிவித்தார். தொடர்ந்து, நூறு ஆண்டுகளாக நிலவும் வேலைவாய்ப்பின்மை, சுயதொழில் பிரச்னைகளை நூறு நாட்களில் சரிசெய்துவிட முடியாது எனவும் தெரிவித்தார். 
 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com