உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இளைஞர் தின விழா:
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற 26-வது தேசிய இளைஞர் தின விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
உற்சாகப்படுத்திய பிரதமர்:
விழா மேடையில் யோகாசனம் மற்றும் பாரம்பரிய மல்லர் கம்பம் போன்ற சாகசங்களை செய்து வீரர் – வீரங்கனைகள் அசத்தினர். இதனை பிரதமர் நரேந்திர மோடி கைதட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
நமது இலக்கு:
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர், சுவாமி விவேகனந்தரை முன்மாதிரியாக கொண்டு இளைஞர்கள் இயங்க வேண்டும் என்றார். உலக அளவில் விளையாட்டு துறையில் இந்திய பெரிய சக்தியாக உருவெடுப்பதற்கு இளைஞர்களே காரணம் என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர், உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளின் பட்டியலில் இடம்பெறுவதே நமது இலக்கு என்றார்.
உற்சாக வரவேற்பு:
முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹூப்ளிக்கு காரில் வருகை தந்தார். சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் மலர்களை தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக காவல்துறையினர் கடும் பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் வேகமாக ஓடிவந்து பிரதமருக்கு மாலை ஒன்றை பரிசளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: கலைத் திருவிழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்!!!