காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் ட்வீட்!

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் ட்வீட்!
Published on
Updated on
1 min read

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், இன்று காசி - தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி:

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கி அடுத்த மாதம் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2 ஆயிரத்து 592 பேர் பயணம் செய்கிறார்கள். 

தொடங்கி வைக்கவுள்ள பிரதமர்:

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் நடைபெறவுள்ள காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார். விழாவின் தொடக்க நாளான இன்று தமிழகத்திலிருந்து வந்த பிரதிநிதிகளுடன் பிரதமா் மோடி உரையாட உள்ளார். இதில் இளையராஜாவின் நிகழ்ச்சிகளும், புத்தக வெளியீடுகள் போன்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. 

ட்வீட்:

இதனிடையே, இந்த நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் கலாச்சார தொடர்புகளையும் அழகிய தமிழ் மொழியையும் கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்பதற்காக வாரணாசிக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com