" எதிர்கட்சிகள் கூட்டம் ஒரு புகைப்பட கண்காட்சி...." - அமித் ஷா.

" எதிர்கட்சிகள் கூட்டம் ஒரு புகைப்பட கண்காட்சி...."  - அமித் ஷா.
Published on
Updated on
2 min read

பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டம் ஒரு புகைப்பட கண்காட்சி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். 

பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டம் ஒரு புகைப்பட கண்காட்சி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். 

இரண்டு  நாள் பயணமாக ஜம்மு- காஷ்மீர் சென்றுள்ள அமைச்சர் அமித்ஷா,  பகவதி நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, எதிர்கட்சி கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்கட்சிகள் சவால் விட விரும்புவதாகவும், அங்கு நடக்கும் கூட்டம் ஒரு புகைப்பட கண்காட்சி எனவும் அவர்களின் ஒற்றுமை கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும், அடுத்த மக்களவைத் தேர்தலில் அவர்கள் தோல்வியை சந்திக்க நேரிடும் என்றும் விமர்சித்தார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமராக மோடி மீண்டும் வருவார் என அமித்ஷா திட்டவட்டமாக கூறினார்.


 பாட்னாவில்  நடந்து வரும் எதிர்கட்சி கூட்டத்தை குறிப்பிட்டு , 

“பாட்னாவில் ஒரு போட்டோ செஷன் நடக்கிறது. அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்து பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மோடிக்கு (2024ல்) சவால் விடுவோம் என்ற செய்தியை தெரிவிக்கின்றனர்.

"இந்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்கள் ஒற்றுமை கிட்டத்தட்ட சாத்தியமற்றது, அது உண்மையாக இருந்தாலும், 2024 இல், 300 க்கும் மேற்பட்ட இடங்களுடன் மோடி திரும்புவது உறுதியானது, தயவுசெய்து மக்கள் முன் வாருங்கள்," என்று அவர் கூறினார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜக எதிர்ப்பு முன்னணியை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரது துணைத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கூட்டத்தை தொகுத்து வழங்குகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தை குறிப்பிட்டு ஷா, “குறிப்பாக விண்வெளி, பாதுகாப்பு மற்றும் குறைக்கடத்தி துறையில் நிறைய ஒப்பந்தங்கள் நடைபெற்று வருகின்றன. உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இப்போது பிரதமரின் தலைமையில் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. ஒன்பது ஆண்டுகளில், 11வது இடத்தில் இருந்த இந்தியாவை உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மோடி உருவாக்கியுள்ளார்" என [புகழாரம் சூட்டினார். 

தொடர்ந்து, ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அவர், “370வது சட்டப்பிரிவை ரத்து செய்தாலும் சரி, ராமர் கோவில் கட்டப்பட்டாலும் சரி, முத்தலாக் தடை செய்யப்பட்டாலும் சரி, ராகுல் பாபாவுக்கு விமர்சனம் செய்வது வழக்கம் என்று விமர்சித்தார். 

பின்னர், 2024-ம் ஆண்டு பிரதமர் பதவிக்கு மோடிக்கு எதிராக களமிறங்குவார்; ஆனால் யாரை தேர்ந்தெடுப்பது என்பது மக்களுக்கு தெரியும் என்றும்  கூறினார். "ஜம்மு காஷ்மீர் செழித்து, பாதுகாப்பான இடமாக மாறுவதை உறுதிசெய்ய மோடியை மீண்டும் பிரதமராக்குவீர்களா" என்று அவர் கேள்வி எழுப்பிய கூட்டத்தில் "மோடி, மோடி" என்று கோஷமிட்டனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com