இந்திய அரசின் மீதும் பிற அமைப்புகளின் மீதும் மற்றும் தனிநபர்களுக்கு எதிராகவும் வெறுப்பு பேச்சுகள் மூலம் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி பிஎஃப்ஐயில் சேர்த்துக் கொண்டதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீவிரவாத பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தமை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பாக ஐதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜூலை 4ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், பின்னர் ஆகஸ்ட் 26ஆம் தேதி என்ஐஏ மீண்டும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்ததாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.
இந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றும் அறியாத முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்ற முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளது. என்ஐஏ விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றியதாகவும், அவர்கள் இந்திய அரசின் மீதும் பிற அமைப்புகளின் மீதும் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் மூலம் ஏமாற்றும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி பிஎஃப்ஐயில் சேர்த்துக் கொண்டதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. பிஎஃப்ஐயில் சேர்க்கப்பட்டவுடன், அவர்கள் யோகா மற்றும் உடற்கல்வி வகுப்புகள் என்ற போர்வையில் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர் எனவும் அங்கு அவர்களுக்கு கத்திகள், அரிவாள்கள் மற்றும் இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தி தொண்டை, வயிறு மற்றும் தலை போன்ற உடல் உறுப்புகளைத் தாக்கி ஒருவரைக் கொலை செய்வது எவ்வாறு எனக் கற்றுக்கொடுக்கப்பட்டது எனவும் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
-நப்பசலையார்