புதிய இந்தியா அசூர வளர்ச்சியை கண்டு வருகிறது - பிரதமர் பெருமிதம்!

புதிய இந்தியா அசூர வளர்ச்சியை கண்டு வருகிறது - பிரதமர் பெருமிதம்!
Published on
Updated on
1 min read

பழைய சவால்களை எதிர்கொண்டு புதிய இந்தியா அசூர வளர்ச்சியை கண்டு வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

இமாச்சலபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி உனா ரயில் நிலையத்திலிருந்து நாட்டிற்கு 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அர்ப்பணித்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர பிற தினங்களில் உனா-டெல்லி இடையே இயக்கப்பட உள்ளன.

தொடர்ந்து உனாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தையும்  திறந்து வைத்தார். மேலும் மருந்துகள் உற்பத்தித் துறையில் தற்சார்பு இந்தியாவை நோக்கிய முயற்சிகளை நிறைவேற்ற, உனாவில் ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மருந்து பூங்காவிற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 

இதனையடுத்து  சம்பா மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு புனல் மின்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், புதிய இந்தியா அசுர வளர்ச்சியை கண்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இமாச்சலில் குடிநீர் விநியோகம், சுகாதார வசதிகளுடன் டிஜிட்டல் கட்டுமானங்களுக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.   மருந்துகளின் மூலப்பொருட்கள், உற்பத்தி இமாச்சலில் தயாராகும் பட்சத்தில் மருந்துகளின் விலை குறையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நடப்பாண்டு இறுதியில் இமாச்சல பிரதேசம், குஜராத் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அங்கு  சென்று வரும் பிரதமர் பல்வேறு திட்டங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com