வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. இந்த தேர்தல் முடிவுகளில் நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
அதாவது நாகலாந்து தனி மாநிலமாக 1963ம் ஆண்டு உதயமானது. அதுமுதல் நடந்த அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட எந்த பெண்களும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவில் இரண்டு பெண்கள் சட்டமன்றத்திற்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் முதல்முறையாக பெண் வேட்பாளர்கள் இருவர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கறிஞரான ஹெகானி ஜகாலு திமாபூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த ஹெகானி என்டிபிபி கட்சியால் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1536 வாக்குகள் வித்தியாசத்தில் ராம் விலாஸின் லோக் ஜனசக்தி கட்சியின் வேட்பாளரான எகெடோ ஜிமோமியை தோற்கடித்துள்ளார்.
இதைப்போன்று என்டிபிபி கட்சி சார்பில் மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான சல்ஹூட்டோனு குர்ஸே 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பெரும் விபத்தை தடுத்த இளைஞர்கள்....!!