தேர்தல் அறிக்கை வெளியிட்ட நட்டா.... விதவை பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.24000 வழங்கப்படும்!!!

தேர்தல் அறிக்கை வெளியிட்ட நட்டா.... விதவை பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.24000 வழங்கப்படும்!!!
Published on
Updated on
1 min read

விவசாயிகள் மற்றும் குடும்பங்களுக்கு பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் நட்டா.  பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.2,000 உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு:

மேகாலயா மாநிலத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை பாஜக தலைவர் ஜே பி நட்டா வெளியிட்டுள்ளார்.  மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவோம் எனவும் மாநில அரசு ஊழியர்களுக்கு  உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவது உறுதி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார் நட்டா.

பெண்களுக்கு...:

பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மாநிலத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், குடும்பத்திற்கு அரசு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் மழலையர் பள்ளி முதல் முதுகலை பட்டதாரி வரை மகள்களின் கல்வியை அரசே கவனித்துக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.  இவை தவிர, விதவை பெண்களுக்கும் மற்றும் தனியாக வசிக்கும் தாய்மார்களுக்கும், அவர்கள் தனியே வாழ்க்கையில் முன்னேறும் வகையில், ஆண்டுதோறும் 24 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார் நட்டா.

விவசாயிகளுக்கு:

விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் நட்டா. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என அறிவித்ததோடு உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளி குடும்பங்களுக்கு இரண்டு எல்பிஜி சிலிண்டர்களும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com