மகாராஷ்டிரா கடலில் ஏகே47 உடன் மிதந்த மர்ம படகு.....!!!!!

மகாராஷ்டிரா கடலில் ஏகே47 உடன் மிதந்த மர்ம படகு.....!!!!!
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ளூர் கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் படகு ஒன்று மிதந்ததையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


ஹரிஹரேஷ்வர்:

ஹரிஹரேஷ்வர் மகாராஷ்டிராவின் உள்ளூர் கடற்கரை பகுதியாகும்.  இங்கு மும்பை மற்றும் புனே நகரத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரியும் இடம்.  சுதந்திரதினத்தன்று பார்வையாளர்களால் நிரம்பி இருந்தது.

மர்ம படகு:

மகாராஷ்டிராவில் ஹரிஹரேஷ்வர் கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த நிலையில் படகு எப்படி வந்தது என்ற காரணம் புரியாமல் விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.

உள்ளூர் நிர்வாகம் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து படகை கரைக்கு இழுத்து சோதித்தப்போது படகில் ஏகே47 உள்ளிட்ட ஆயுத்ங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுவே சந்தேகத்திற்கான காரணம் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சிறப்பு குழு:

படகைக் குறித்து விசாரிக்க சிறப்பு குழு நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம் வைக்கபோவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமையன்று “தாஹி ஹண்டி”நிகழ்வு இருப்பதாகவும் அன்று அதிக அளவில் மக்கள் இங்கு வருகை புரிவர் என்றும் அதிகாரி கூறியுள்ளார்.  மேலும் பாதுகாப்பை இன்னும் அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com