மோர்பி தொங்கும் பாலம் விபத்து...உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்....

மோர்பி தொங்கும் பாலம் விபத்து...உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்....
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் 100 ஆண்டுகளுக்கு முன்பு பழமை வாய்ந்த தொங்கு பாலம் புனரமைக்கப்பட்டு கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று இந்த பாலத்தில் 500க்கும் மேற்பட்டோர் நின்றுக்கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தனர்.அப்போது சுமை தாங்க முடியாமல் திடீரென கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. இதில் பாலத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் அப்படியே ஆற்றில் விழுந்தனர். 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

மோர்பி தொங்கும் பாலம் விபத்து தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் நீதி ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இது தவிர, பழமையான மற்றும் ஆபத்தான நினைவுச் சின்னங்கள், பாலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com