பணமோசடி வழக்கு: கைதான நவாப் மாலிக்கிற்கு 8 நாட்கள் அமலாக்கத்துறை காவல் - சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள நவாப் மாலிக்கை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பணமோசடி வழக்கு: கைதான நவாப் மாலிக்கிற்கு 8 நாட்கள் அமலாக்கத்துறை காவல் -  சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும், நவாப் மாலிக் மீது பணமோசடி புகார்களும் எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நவாப் மாலிக் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறையினர் பல மணி நேர விசாரணைக்கு பின் அவரை கைது செய்தனர். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது மார்ச் 3ஆம் தேதி வரை  அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com