அதானிக்காக செயல்படும் மோடி அரசு...!

அதானிக்காக செயல்படும் மோடி அரசு...!
Published on
Updated on
1 min read

எந்த மாநிலத்தில் எவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தினாலும் அதானி குழுமத்திற்கே ஒப்பந்தம் வழங்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணம்:

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், இந்திய ஒற்றுமை பயணத்தின் போது நாட்டு மக்களின் குரலுக்கு செவி கொடுத்ததாகவும், தமது கருத்துகளை மக்களிடம் தெரிவிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

அதிகரிக்கும் வன்முறை:

அதனை தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருப்பதாகவும் அக்னிவீர் திட்டம் மூலம் 4 ஆண்டுகள் ஆயுத பயிற்சி பெறுவதால் நாட்டில் வன்முறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.  அக்னிவீர் திட்டம், ஆர்.எஸ்.எஸ்., உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்தது என்றும் ராணுவத்திலிருந்து வந்தது அல்ல என்றும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார் ராகுல் காந்தி.

இடம் பெறவில்லை:

மேலும் குடியரசு தலைவர் உரையில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாடு முழுவதும் அதானி:

மேலும் தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப் பிரதேசம் வரை எங்கும் 'அதானி' என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது அதானி உடனான நட்பு தொடங்கியதாகவும் குற்றஞ்சாட்டினார்.  அதனாலயே அதானிக்கு பிரமதர் விஸ்வாசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எழும்பிய சந்தேகம்:

மேலும் அதானி 8 முதல் 10 துறைகளில் இருக்கிறார் என்றும், 2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலரை எட்டியது எப்படி என்றும் இளைஞர்கள் தங்களிடம் கேள்வி எழுப்பியதாக கூறினார். 

முன் அனுபவம் இல்லாதவர்கள்:

விமான நிலையங்களில் முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய வளர்ச்சியில் ஈடுபடக்கூடாது என்ற விதியை மாற்றி அதானி குழுமத்திற்கு லாபம் தரக்கூடிய 6 விமான நிலையங்கள் வழங்கப்பட்டதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.

உண்மையில்...:

அதானிக்கு பாதுகாப்புத் துறையில் அனுபவம் இல்லை என தவறான குற்றச்சாட்டுகளை தாங்கள் முன்வைத்ததாக பிரதமர் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய ராகுல்காந்தி,  உண்மையில் எச்ஏஎல் நிறுவனத்தின் 126 விமானங்கள் ஒப்பந்தம் அனில் அம்பானிக்கு சென்றதாக கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com