"பாராளுமன்ற பணியாளர்களின் புதிய சீருடையில், ஏன் தாமரை அச்சிடப்பட்டுள்ளது?" -  மாணிக்கம் தாகூர் எம்பி கேள்வி!!

"பாராளுமன்ற பணியாளர்களின் புதிய சீருடையில், ஏன் தாமரை அச்சிடப்பட்டுள்ளது?" -  மாணிக்கம் தாகூர் எம்பி கேள்வி!!
Published on
Updated on
1 min read

புதிய பாராளுமன்ற கட்டிடம், செயல்பாட்டுக்கு வரவிருக்கும் நிலையில், அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கு, தாமரை சின்னம் அச்சிடப்பட்ட புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.

லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு புதிய சீருடை உட்பட பல மாற்றங்களுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம், தனது முதல் கூட்டத்தொடரை நடத்த தயாராக இருக்கிறது.

அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கும் இரண்டு அவைகளையும் சேர்ந்த 271 ஊழியர்களுக்கு, க்ரீம் நிறத்தில் மேல் ஜாக்கெட்டும், இளம் சிவப்பு நிறத்தில் தாமரை அச்சிடப்பட்ட சட்டையும், காவி நிற கால் சட்டையும், செப்டம்பர் 6ம் தேதியன்றே வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த புதிய சீருடை, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஆண் மற்றும் பெண் என இரு பாலரும் அணிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 18ல் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், 19ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதிய பாராளுமன்றத்தில் கூட்டத்தொடர், சிறப்பு பூஜையுடன் தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com