இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்.....காரணம் இதுதானா?

இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்.....காரணம் இதுதானா?
Published on
Updated on
1 min read

"திருத்தியமைக்கப்பட்ட புதிய திரிணாமுல் காங்கிரஸ்" இன்னும் ஆறு மாதங்களில் என்ற வாக்கியத்தைத் தாங்கிய போஸ்டர்கள் கல்கத்தாவின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளரான அபிஷேக் பானர்ஜியின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.  மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெறவில்லை.  எது எவ்வாறாயினும் 1998 முதலே கட்சிஒயின் எந்த போஸ்டர்களிலும் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றதில்லை.

வளர்ச்சி குறித்து கட்சியின் தலைவர்கள் எவரும் வாய் திறக்காத நிலையில் அபிஷேக் பானர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் போஸ்டர்களில் எவ்வித தவறும் இல்லை என கூறியுள்ளார்.

கற்றுக் கொண்டு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அபிஷேக் பானர்ஜி பேசியுள்ளார்.  இதனை வைத்துக் கொண்டு தொண்டர்கள் இவ்வாறான போஸ்டர்களை ஒட்டியிருக்கலாம் என கட்சியில் உள்ளவ்ர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து ஆதிர் ரஞ்சன் கூறுகையில் திரிணாமுல் காங்கிரசின் உள்கட்சி போராட்டத்தின் வீழ்ச்சி என கூறியுள்ளார்.

கடந்த ஓராண்டாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சி போராட்டம் வெளிப்படையாகவே இருந்து வருகிறது எனவும் ஆனால் மம்தா பானர்ஜி அதை திறமையாக சரிசெய்வார் எனவும் ஆதிர் ரஞ்சன் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com