நாட்டில் உள்ள முதலமைச்சர்களில் சொத்துகளின் அடிப்படையில் மிக ஏழ்மையானவராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளது அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற நிறுவனம் சார்பில் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களின் சொத்து விவரங்கள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு அதன் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி 28 மாநிலங்கள் மற்றும் டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் உள்ள 30 முதலமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில், மிக ஏழ்மையான முதலமைச்சராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இருப்பதாகவும், அவரிடம் 15 லட்சம் ரூபாய் மட்டுமே சொத்துகள் இருப்பதாகவும் ஆய்வில் வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில், மீதமுள்ள 29 முதலமைச்சர்கம் கோடீஸ்வரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.