மணீஷ் சிசோடியா தனது அரசு இல்லத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்ட சட்டரீதியிலான நடவடிக்கையை, விளம்பரத்திற்காக துணைநிலை ஆளுநர் சக்சேனா விமர்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
புதிய மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த 26ம் தேதி டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் அவரது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவரது அரசு இல்லம் புதிய அமைச்சர் அதிஷிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்செய்தியை கசிய விட்டதன் மூலம் அரசியல் சாசனத்தின் கண்ணியத்தை சக்சேனா அவமதிப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படிக்க: சொகுசு காரில் பூந்தொட்டிகள் திருட்டு...!!