கோட்டா கிராமத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றில் சிங்கமும், சிங்க குட்டியும் தவறி விழுந்தன. இதுகுறித்து விவசாயி ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
திறந்தவெளி கிணறு:
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கிர் வனப் பிரிவில் உள்ள கிணற்றில் விழுந்து சிங்கமும், சிங்க குட்டியும் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காரணம் என்ன?:
இதுகுறித்து வனத்துறை துணைப் பாதுகாவலர் கூறும்போது கம்பா தாலுகா கோட்டா கிராமத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றில் சிங்கமும், சிங்க குட்டியும் தவறி விழுந்தன எனவும் இதுகுறித்து விவசாயி வனத்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, இரண்டும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிங்கங்களின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: இந்தியாவிலிருந்து முதல் முறையாக ஜப்பானில்.....