நீதிபதிகளின் கடும் விமர்சனங்களுக்குப்பின் ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக மாற்றுவதற்கான அறிக்கையை தாக்கல் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
முன்னதாக மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் “இந்தப் பகுதிக்கு முன்னோடியில்லாத வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது. இந்த பழைய பிரிவு 370 ஆட்சியில் அடிக்கடி காணாமல் போனது என்றும், இது “உண்மைக்கான சான்று என்றும் கூறியது. இது நாடாளுமன்றத்தின் அறிவு என்று விவேகமாகப் பயன்படுத்தப்பட்டது.”
இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்த பிரமாணப் பத்திரம், மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டப் பிரச்சினைகளுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், அந்த நோக்கத்திற்காக அதை நம்ப முடியாது என்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.
மேலும், வழக்கு விசாரணையின் போது ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பிரமாணபத்திரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும், இதில் உள்ள அரசியல் சாசனம் தொடர்பான விஷயங்களை மட்டுமே விசாரிப்போம் என்று அமர்வு தெளிவுபடுத்தியிருந்தது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ன் படி ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கடந்த 1954- ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் (மறுசீரமைப்பு) சட்டம் 2019 அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வறிருக்க, ஜம்முகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எத்தனை காலத்திற்கு ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசமாக தொடரும் எனவும் எப்போது தேர்தல் நடைபெறும் எனவும் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
ஜனநாயகத்தை மீட்டெடுப்பது அவசியம் எனக்கூறி மாநில அந்தஸ்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது.
இதையும் படிக்க | இலங்கைக்கு முட்டை ஏற்றுமதி; கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி!