ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு; 11ஆம் தேதி உச்ச நீதி மன்றத்தில் விசாரணை!

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு; 11ஆம் தேதி உச்ச நீதி மன்றத்தில் விசாரணை!
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை வரும் 11-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. பின்னர் இம்மாநிலத்தை  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கிய அரசியலமைப்பு சட்ட பிரிவுகளான 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இதனை எதிர்த்து அப்போது பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து பெரும் போராட்டங்களும் நாடெங்கும் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றின் நீக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு வரும் 11-ம் தேதி முதல் விசாரிக்கவுள்ளது. அன்றைய தினம் மனுக்களை நாள்தோறும் விசாரிப்பதற்கான கால அட்டவணையை நீதிபதிகள் நிா்ணயிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com