"பாரதம் என்று அழைப்பது மோசமான விஷயம் அல்ல; ஆனால் இந்தியன் என்பதை மறந்துவிடாதீர்கள்" நடிகர் ஜாக்கி ஷெராப்!!

"பாரதம் என்று அழைப்பது மோசமான விஷயம் அல்ல; ஆனால் இந்தியன் என்பதை மறந்துவிடாதீர்கள்" நடிகர் ஜாக்கி ஷெராப்!!
Published on
Updated on
1 min read

இந்தியாவை பாரதம் என்று அழைப்பது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல என்று நடிகர் ஜாக்கி ஷெராப் தெரிவித்துள்ளார். 

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி-20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. வருகின்ற 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர்  என்பதற்கு பதிலாக, பாரத் குடியரசு தலைவர் என்று  அச்சிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து  நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதிலாக 'பாரத்' என மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்பட வேண்டும் என சில தரப்பினர் ஆதரவும், இந்தியா என்ற பெயரே தொடர வேண்டும் என ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திரையுலகின் முன்னணி நடிகரான ஜாக்கி ஷெராப், இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவா்," என் பெயர் ஜாக்கி ஷெராப், ஆனால், சிலர் என்னை ஜாக்கி என அழைக்கிறார்கள். மக்கள் என் பெயரை மாற்றுகிறார்கள், அதனால் நான் மாறிவிட்டேன் என அர்த்தம் இல்லை. நான் மாறவும் மாட்டேன்" என கூறியுள்ளார். 

மேலும்" நீங்கள் நாட்டின் பெயரை மாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒரு இந்தியன் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்" என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com