என்னை சிறையில் அடைக்கலாம் - ஆனால் மனவலிமையை உடைக்க முடியாது என டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ட்வீட் செய்துள்ளார்.
டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்ட போது 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா, 9 நாட்கள் CBI காவலில் வைக்கப்பட்டு தற்போது அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக் காவலில் உள்ள டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் என்னை சிறையில் அடைத்து வைத்து தொந்தரவு செய்யலாம், ஆனால் என் மனவலிமையை உடைக்க முடியாது என்றும், ஆங்கிலேயரின் கொடுமைகளுக்கு மத்தியிலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் எந்நிலையிலும் அஞ்சாததாக மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.